புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2019

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எமது கட்சியில் இணையவேண்டிய அவசியம் இல்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எமது கட்சியில் இணையவேண்டிய அவசியம் இல்லை. என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் நேற்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் நிறைவில் செய்தியாளர்களிடம் கரெத்து தெரிவிக்கெம்போதே தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு கூட்டணியின் செயலாளர் நாயகம் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

எந்தக் கட்சியினையும் பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கு இல்லை. அதனால் கூட்டமைப்பில் தற்போதுள்ள ஓர் கட்சி அதில் இருந்து வெளியேறி எம்மோடு இணைவதானால் அது கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமையும். அதேநேரம் கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே பிரிந்தவர்கள் கொள்கையின் அடிப்படையில் இணைந்து பயணிக்க முடியும்.

தற்போது நாம் ஓர் கடை விரித்துள்ளோம். அதில் வேண்ட விரும்புகின்றவர்கள் வேண்டிக்கொள்ளலாம் என்பதுபோன்று சேர விரும்புவோர் சேர்ந்து கொள்ளலாம். தற்போது கொள்கை அடிப்படையில் இணைந்தெள்ளோம். இதே கொள்கை அடிப்படை உடையவர்களை இணைத்துக்கொள்வோம். அதேநேரம் அனந்தி சசிதரன் , ஐங்கரநேசன் போன்றோர் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்த்தோம். இருப்பினும் அவர்கள் தமது கட்சியை வலுப்படுத்தவே விரும்பினர். அதனால் அவர்கள் தமது கட்சியை முன்கொண்டு சென்று கட்சிகளின் கூட்டாக செயல்படும்போது இணைந்து பயணிக்க முடியும்.

இதேநேரம் எமது கட்சியின் கொள்கைகளில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தில் முஸ்லீம்களிற்கு ஓர் தனியான அலகு வேண்டும். என்பது முக்கிய தீர்மானமாகும். அதேநேரம் அடுத்த கட்டமாக ஈ.பீ.ஆர்.எல்.எவ் மற்றும் முன்னணி என்பனவும் இணைந்து பயணிப்பதற்கான பேச்சுக்கள் தொடர்கின்றன. என்றார்

ad

ad