புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி

யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடக வளங்கல் பயிற்சிமைய 5 ஆம் அணி மாணவர்களால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஊஞ்சல்கட்டி, கோவில்புதுக்குளம் போன்ற எல்லைக்கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



ஒவ்வொன்றும் சுமார் 2000 ஆம் ரூபா பெறுமதியான 200 உலர்உணவுப் பொதிகளே இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



நெடுங்கேணி பிரதேச செயலக காணி அதிகாரி இ.ரஜீவனின் ஏற்பாட்டில் 5 ஆம் அணி ஊடக மாணவர்கள் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் பங்களிப்பில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.



இதன்போது சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.

ad

ad