புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2019

சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார்.

கேரளாவின் சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார்.

சபரிமலையில் பெண்கள் வழிபட இந்து அமைப்புக்கள் தொடர்ந்தும் தடை விதித்துவருகின்ற நிலையில் பலத்த முயற்சிகள் மத்தியில் இரு தமிழக பெண்கள் மலையேறி வழிபட்டிருந்தனர்.இதற்கு எதிராக இந்து அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தியதுடன் ஆலயத்தில் தீட்டு ஏற்பட்டுள்ளதாக நடைமூடி கிரியைகள் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் குழப்பங்களுக்கு மத்தியிலும் ஈழத்தைப் பூர்வீகமாக கொண்ட சசிகலா என்ற 46 வயதான பெண் சபரிமலையின் 18 படிகளில் ஏறி, வணங்கி பாதுகாப்பாக இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரது தந்தை அசோக் குமரன் இலங்கைக் கடவுச் சீட்டைக் கொண்டவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் ஏறுவதற்கு பெண்களுக்கு நிலவிய தடை உயர்நீதிமன்றால் நீக்கப்பட்டதை அடுத்து, கேரளாவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad