புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2019

வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?


அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று, தகவல்கள் கசிந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய, அனைத்து மாகாண ஆளுநர்களும், தங்களது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்திருந்த நிலையில், மாகாணங்களுக்கான ஆளுநர் பதவிகள், வெற்றிடமாக இருந்து வருகின்றன.

இந்நிலையிலேயே, இன்றைய தினம், புதிய ஆளுநர்களுக்கான நியமனங்கள் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராகவும் கிழக்கு மாகாண ஆளுநராக, அசாத் சாலி நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளமை

ad

ad