புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2019

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று வவுனியா தரணிக்குளம் பாடசாலை மைதானத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ராகுலன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியாலர்களினால் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்கள் தொடர்பாக தெரிவித்த விடயம் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரனின் கருத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. எனினும் போர்க்காலத்திலும் கூட எங்களுடைய மக்களின் பிரச்சனைகளை எழுதிய பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். ஆகவே விமர்சனம் என்பது ஒருவருடைய மனதை புன்படுத்தாத ரீதியில் செய்யப்பட வேண்டும் என்பது என் கருத்து.

ஆனால் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். விமர்சனங்களின் ஊடாகத்தான் அரசியலிலும், வேறு சில விடயங்களிலும் அதிகளவில் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆகவே எங்களது போராட்ட காலத்திலே முன்னணி வகித்த பல ஊடகங்கள், அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களுடைய தியாகங்கள் மறக்க முடியாதது.

பல ஊடகவியலாளர்கள் இறந்தும் இருக்கிறார்கள். நான் மிகவும் மதிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த தராக்கி சிவராம் மற்றும் யாழ்ப்பாணத்திலும் பல ஊடகவியளாலர்கள் மரணித்திருக்கிறார்கள்.

இவர்களது தியாகங்களும் எங்களது இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு விதையாக அமைந்திருக்கின்றது. அந்தநிலையில் தமிழ் ஊடகங்களின் தியாகங்கள் துணிச்சலான எழுத்துக்களையும் எந்தங்காலத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்தார்.

ad

ad