புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2019

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட கதிர்காமர் கொலை சந்தேக நபர் – காத்திருக்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்களுக்காக, காத்திருப்பதாக சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை மற்றும் டக்ளஸ் தேவானந்தா கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், தென்மேற்கு ஜேர்மனியில் கடந்த புதன்கிழமை 39 வயதுடைய நவநீதன் என்ற சந்தேக நபரைக் கைது செய்திருப்பதாக ஜேர்மனி காவல்துறை தெரிவித்திருந்தது.

எனினும், இது தொடர்பாக, ஜேர்மனியின் உள்துறை அமைச்சின் தகவல்களுக்காக காத்திருப்பதாக, பெர்லினில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி கோரிக்கை விடுத்தால், எத்தகைய விசாரணைக்கும் ஒத்துழைக்கவும், உதவவும், சிறிலங்கா தயாராக இருப்பதாக, ஜேர்மனிக்கான சிறிலங்காவின் தூதுவர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.



அதேவேளை, இதுதொடர்பாக கருத்து எதையும் வெளியிட கொழும்பில் உள்ள ஜேர்மனி தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ad

ad