7 ஜன., 2019

பலாலியை கைவிட்டதா இந்தியா?

பலாலி விமான நிலைய கட்டுமானப்பணிகளை இலங்கை அரசியலில் நிலையற்றத்தன்மை காரணமாக பிற்போடப்போவதாக யாழிலுள்ள இந்திய துணைதூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக கடந்த ஆண்டின் இறுதியில் முதலாவது சர்வதேச விமான சேவையினை தமிழகத்தின் விமான தளமொன்றிலிருந்து ஆரம்பிக்க இந்திய முற்பட்டிருந்தது.ரணிலுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது இந்திய தூதரிற்கு அதற்கான உறுதி மொழி வழங்கப்பட்டுமிருந்தது.

எனினும் பலாலி விமான நிலையப் பணிகளை ஆரம்பிப்பதில் கொழும்பு அரசியல் குழப்பம் தடையேற்படுத்தியிருந்தது. அதிலும் மைத்திரி தடையினையடுத்து இந்தியா அதனை பிற்போட முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.