புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2019

பரிஸை அச்சுறுத்தும் மர்மக்காய்ச்சல் : மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவிவரும் மர்மக்காய்ச்சலினால் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய சுகாதார ஆணைக்குழு (Agence Régionale de Santé) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இல்-து-பிரான்சுக்குள் ஒவ்வொரு 100,000 பேரில் 499 பேர் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 413 பேராக மாத்திரமே காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் 3,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த எண்ணிக்கை 3,655 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிர்ச்சியளிக்கும் விதமாக, இதுவரை இந்தப் புதியகாய்ச்சலினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்வேறு அவசரகால சுகாதார மையங்கள் இல்-து-பிரான்ஸ் முழுவதும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad