புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2019

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் தமிழக முதல்வர்: தமிழிசை பாராட்டு

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும்  தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் என்று தமிழக பாஜக தலைவர்
தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங் களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி யாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ''தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசு, மீன்பிடி, விசைத்தறி, கைத்தறி, கட்டுமானம், சலவை, மரம் ஏறுதல், உப்பளம், காலணி, தோல் பொருள்கள் தயா ரித்தல், துப்புரவு, மண்பாண்டங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்கள், கைவினைஞர்கள் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவி யாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
இதனால் கிராமங்களில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங் கள், நகரங்களில் வாழும் 25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் என மொத்தம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்கள் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி யைப் பெறுவர். இதற்காக 2018-19 துணை மானியக் கோரிக்கையில் ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி வரவேற்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த அறிவிப்பை வரவேற்றதோடு தமிழக முதல்வரைப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும்  தமிழக முதல்வருக்குப் பாராட்டுகள்'' என்று தெரிவித்துள்ளார்.

ad

ad