புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2019

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை அடுத்து அமர்வில்

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கனவே தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்தது.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுக்குமாறு நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் இதன்போது எதிர்க்கட்சியினர் குறித்த பிரேரணை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் குறித்த விவாதத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டு இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்குக் கட்டாயம் ஆதரவளிக்குமாறு ஆளும் கட்சியில் உள்ள அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் பிரதம ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக எழுத்து மூலம் நேற்று அறிவித்திருந்தார்.

ad

ad