புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2019

பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி! கதறி அழும் 6 சோடிகள்


இந்தோனேசியா நாட்டில் நேற்று திங்கட்கிழமை 6 சோடியினருக்கு (12 பேர்) பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

6 சோடியினரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதாவது கடந்த ஆண்டு பண்டா ஏக் நகரில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தியபோது இவர்கள் அனைவரையும் கள்ளக்காதல் சோடியினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்தனர். அதன் பின் குறித்த 6 சோடியினரும் தனித்தனியே சிறையில் அடைக்கப்பட்டனர்.

இல்லாமியச் சட்டங்களைக் கடைப்பிடிக்கின்ற நாடு இந்தோனேசியா. அங்கு சரியா (Sharia law) சட்டம் நடைமுறையில் உள்ளது. எனவே திருமணம் செய்யாத இவர்கள் விடுதிகளில் ஒன்றாக இருந்தமையால் இவர்கள் கள்ளக் காதலர்கள் என்றவகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை குறித்த சோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்டன. இதில் 4 சோடியினருக்கு தலா 7 சவுக்கடிகள் வழங்கப்பட்டன. மற்றைய 2 சோடியினருக்கம் 17 முதல் 25 சவுக்கடிகள் வழங்கப்பட்டன.

சவுக்கடி வலி தாக்க முடியாமல் தண்டனை பெற்ற பெண்கள் கதறி அழுதனர். இருவரைக் தூக்கிக்கொண்டே சென்றனர்.

குறித் சம்பவத்தை தொலைபேசியில் காணொளியாக்கி மக்கள் சமூக ஊடகங்களில் பிரசுரித்தனர். குறித்த தண்டனை குறித்து மனித உரிமை அமைப்புகள் தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளன.

ad

ad