புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2019

கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை தலைவராக மீண்டும் ஜனாதிபதி கே.வி.தவராசா

கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை தலைவராக மீண்டும் ஜனாதிபதி கே.வி.தவராசா
இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்கு வெளியில் - குறிப்பாகக் கொழும்பில் - தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன.

சில முடிவுகளை உரிய வேளை வரும்போது எடுப்போம்." இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

கொழும்பு - பம்பலப்பிட்டி சனசமூக நிலைய மத்திய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ரி.துரைராஜசிங்கமும் கலந்துகொண்டார்.

கொழும்புக் கிளையின் தலைவராக மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவானார். இவரே கட்சியின் சட்டத்துறைச் செயலாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்புக் கிளையின் செயலாளராக ஆர்னோல்ட் பிரிந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.

ad

ad