புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 மார்., 2019

வடக்கு நா.உறுப்பினர்களுக்கு ஆங்கிலப்பிரச்சினை:இராகவன் கவலை!,

வடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆங்கில அறிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன்.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 16 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்குவதற்கு சிபாரிசுகளை வழங்குமாறு கோரி வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு விருப்பமில்லை எனில் விருப்பமில்லை என பதில் அனுப்பி இருக்கலாம். என்ன அந்த கடிதத்தை நான் ஆங்கிலத்தில் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன். அது எனது தவறு என்பதனை இப்ப நான் ஏற்றுக்கொள்கிறேனென கலாநிதி. சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினமான செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 16 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்குவதற்கான ஆளுநரது முயற்சி கடுமையான விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் சங்கங்கள் இதற்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் ஆளுநர் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சீறிப்பாய்ந்துள்ளார்.