புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 மே, 2019

பிட்​டகோட்டேயில் 193 துப்பாக்கி ​ரவைகள் மீட்பு!

பிட்டகோட்டே- ஏப்பிட்டமுல்ல பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிலிருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 193 துப்பாக்கி ​ரவைகளும் அருள் 89 ரக ஆர்.ஜி.பி ​ரவையொன்று மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது, பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மிரிஹான காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறை, குறித்த ​ரவைகள் பழங்காலப் பொருள்களாக வீட்​டின் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதற்காக கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதற்காக, அமைக்கப்பட்டிருந்த படி வரிிசையின் கீழ் உள்ள அலுமாரியொன்றில் சிறு சிறு பைகளில் சுற்றப்பட்டு, புலி இலட்சிணையுடனான பெரிய பை ​ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை மீட்கப்பட்டதாக காவல் துறைதெரிவித்துள்ளனர்.