புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 மே, 2019

யாழ் .சுண்டுக்குழிமகளிர் கல்லூரிக்கு மிரட்டல்

யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் .சுண்டுக்குழி மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடிதம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.