புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 மே, 2019

மட்டக்களப்பில் 35 புதைக்கப்பட்ட உடலங்கள்

மட்டக்களப்பில் கடந்த காலங்களில் காணாமல் போன 35 தமிழர்களின் உடல்கள்  புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் இக்கருத்தினை வெளியிட்டள்ளார்.

மட்டக்களப்பில் கடந்த காலங்களில் காணாமல் ஆக்க்பபட்டவர்களின் 35 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை  கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.ஏ.ஜயசேகர ஊடாக இராணுவத் தளபதிக்கு அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.