புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 மே, 2019

சிறீலங்கா படையினர் வடக்கில் சோதனை நிலையங்களை நிதந்தரமாக அமைக்க நடவடிக்கை

குண்டு வெடிப்பினை தொடர்ந்து வடக்கில் முதன்மை வீதிகளில் மாவட்டங்கள் தோறும் படையினர் பொலீசார் குவிக்கப்பட்டு வீதிச்சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வவுனியாவில் இருந்து செல்லும் வழி,மற்றும் மாங்குளத்தில் இருந்து செல்லும் வழி,வெலிஓயாவில் இருந்து செல்லும் வழி கிளிநொச்சியில் இருந்து செல்லும் முதன்மை வீதிகளில் படையினரின் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்துக்கள் மற்றம் ஊர்திகள் சோதனையிடப்படுவதுடன் பயணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையிலும் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்,

வெலிஓயாவில் இருந்து மற்றும் கொக்குளாய் பகதியில் இருந்து செல்பவர்கள் கோம்பாய் சந்திப்பகுதியில் அமைக்கப்பட்ட படையினரின் சோதனை நிலையத்தில் சோதனையிடப்படுவதுடன் பேருந்துக்களில் செல்லும் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றார்கள்.

ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதியிலும் படையினர் சோதனை நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துக்கள் இறக்கி சோதனையிடப்படுகின்றன.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஒட்டுசுட்டானில் இருந்தும்,கிளிநொச்சியில் இருந்தும் முல்லைத்தீவில் இருந்தும் செல்லும் அனைத்து பேருந்துக்களிலும் செல்லும் மக்கள் இறக்கி சோதனையிடப்படுகின்னறன.

வடக்கில் முதன்மையாக ஆனையிறவு பகுதியில் பாரிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு செல்லும் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றத.

பூநகரி பகுதியிலும் படையினரின் சோதனை நிலைத்தில் இவ்வாறே சோதனை செய்யப்படுகின்றன.

பூநகரியில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் சங்குப்பிட்டி பாலத்தின் இறகத்திற்கு அருகில் படையினர் சோதனை நிலையம் அமைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

குறிப்பாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சோதனை நிலையங்களை தற்போது நிதந்தரமாக அமைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

மண்மூடை அடிக்கப்படுவதும் நிலையான சோதனை கொட்டில்கள் அமைக்கப்படுவதும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான சோதனை நடவடிக்கையினால் வளமையான நேரத்தினை விட குறித்த இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் சென்றே குறித்த இடத்தினை அடையவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மக்கள் மாத்திரம் இன்றி வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி,முல்லதை;தீவு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இரவு நேரங்களில் வீதிகளில் ஆங்காங்கே முக்கியமான இடங்களில் வீதி மறியல் போடப்பட்டு படையினர் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் உந்துருளிகளை சோதனை செய்யும் நடவடிக்கையிலும் பதிவு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

படையிரின் சோதனை நிலையங்கள் நிதந்தரமாக அமைக்கும் நடவடிக்கையினை பார்த்தால் இந்த நிலை இன்னும் நீண்டகாலம் தொடருமோ? என்ற அச்சத்தில் வடக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்க