புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2019

5ஜி விவகாரம்! தெரசா மேயினால் அமைச்சர் பதவி நீக்கம்!

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அமைச்சர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
பிரிட்டனின் 5G தொழில்நுட்பக் கட்டமைப்பு தொடர்பில் குவாய் நிறுவனத்தின் பங்கு பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த விடயம் வெளியே கசிந்ததற்கு கேவின் வில்லியம்சனைப் (Gavin Williamson) காரணமெனத் தாம் நம்புவதாகத் தெரிவித்த பிரதமர் அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளாார்.
அதற்குரிய வலுவான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இக்குற்றச்சாட்டை வில்லியம்சன் மறுத்துள்ளார்.
முக்கியமான விவாதத்தின் விவரங்கள் வெளியே கசிந்ததன் தொடர்பில் தாம் புலனாய்வுக்கு ஆட்படத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

ad

ad