புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மே, 2019

யாழில் புத்தளத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது புத்தளத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருநெல்வேலி பகுதி இராணுவத்தினரால் நேற்று காலை தொடக்கம் மாலை வரை முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன.

அப்பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள் என அனைத்தும் படையினரால் சோதனையிடப்பட்டது.இதன் போது திருநெல்வேலி கருவப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் கோப்பாய் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டர். கைது செய்யப்பட்ட இளைஞர் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், வியாபாரம் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்றும்காவல் துறை முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கோப்பாய் காவல் துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், விசாரணையின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும்காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.