புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2019

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான கோரி க்கைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக த்தின் இந்துக் கற்கைகள் பீடத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு திருமதி சுகந்தினி முரளிதரன் தலைமையில் நேற்றுக்காலை நடைபெற்றது.

யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலயத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் யாழ்.பல் கலைக்கழக தகுதிவாங்ந்த அதிகாரி ரோசிரியர் க.கந்தசாமிகலந்து கொண்டு சிறப்பித்தார்.சிறப்பு விருந்தினராக இந்தியத் தூதுவர் ச.பாலச்சந்திரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பல்கவைக்கழக பீடாதிபதிகள்,பேராசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாகஇந்துநாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான கோரிக்கை தொடர்பில் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் யாழ்.பல்கலைக்கழக சமுகம் பேச்சுக்களை நடத்தியிருந் தது.இதன் தொடர்ச்சியாகவே இந்து நாகரிகத்துறைக்கு தனியான பீடமொன்றை அமைப்பதற்கு பல் கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஒப்புதல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைக்கவேண்டுமென கோரி விரிவுரையாளர் ராமநாதன் 1978 ஆம் ஆண்டு கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.எனினும் இதற்கு கைமேல் பலனாக 2011 இல் அனுமதி வழங்கப்பட்டபோதிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.


இந்த நிலையில் தற்போது அது கைகூடியுள்ளது. இதன்மூலம் இந்துநாகரித்துறையை கற்கும் மாணவர்கள் பொது மற்றும் விசேட பட்டங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்

ad

ad