புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஜூன், 2019

இணைய வேண்டும் என்பவர்கள் நீராவியடி ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்! - செல்வம் எம்.பி

அடிப்படைவாதத்திற்கு எதிராக பௌத்தர்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவோர் முதலில் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றை அண்மித்து அடாவடித்தனமாக பௌத்த விகாரைகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கு எதிராகவும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் அதிகளவில் குரல் எழுப்புவது பௌத்த தேரர்களே.

நாட்டிலிருந்து பயங்கவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும். எனினும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை விட்டுக்கொடுக்கவோ அல்லது அவர்கள் மீது காழ்ப்புணர்வு கொள்ளவோ முடியாது.

இத்தகைய கருத்துக்கள் இனவாதத்தைத் தூண்டும் முயற்சி என்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.