புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஜூன், 2019

னாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்! - கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பி.பி.சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இதுவரை தான் எந்த விண்ணப்பமும் முன்வைக்கவில்லை எனவும் கட்சியின் தலைமைத்துவத்துடன் தனது பெயர் பிரேரிக்கப்பட்டால் அது குறித்து ஆராயத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தனக்கு ஒருமித்து ஆதரவளிக்கும் பட்சத்தில் இதுகுறித்து தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்தா