28 ஜூன், 2019

அபிவிருத்தி என்ற பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை - சம்பந்தன்

அபிவிருத்தி என்ற பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாராக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில் தற்போதைய அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்த இரா.சம்பந்தன், அபிவிருத்தியின் பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாராக இல்லை என தெரிவித்தார்.

உரிமைகளுக்கே முன்னுரிமை கிடைக்க வேண்டும் என தெரிவித்த இரா. சம்பந்தன், அதன் அடைப்படையில் அபிவிருத்தி கிடைக்கப்பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.