புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2019

தினகரனின் வலதுகரம் இனி திமுகவின் தேனிக்கரம்

தலமை அதிர்ப்தியாலும் கருத்து மாறுபாடு காரணத்தாலும் தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் இன்று திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.மு.க.ஸ்டாலினை ஆளுமை மிக்க தலைவர் என புகழாரம் சூட்டிய தங்க தமிழ்ச்செல்வன், ஒற்றைத் தலைமை உள்ள கட்சிதான் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் திமுகவில் இணைந்ததாக கூறியுள்ளார்.


ஜெயலலிதா காலத்தில் தேனி மாவட்டத்தில் அவருடைய செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர் தங்க.தமிழ்ச்செல்வன். ஜெயலலிதாவுக்காக தனது ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஒரே ஏறுமுகமாகத் தான் இருந்தது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவுடன் அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்த ஜெயலலிதா, தேனி மாவட்ட அதிமுக செயலாளராக்கினார்.
OPSகு தேனியில் இருக்கும் செல்லவாக்கை போலவே தங்க தமிழ்செலவனுக்கும் உண்டு, அதிமுக பிரிந்ததில் இருந்து தினகரனின் நம்பிக்கைக்குரியவராகவும், அமமுக்கவின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் இருந்தார், கடந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்காததால் தினகரன் மீது பல்வேறு விமர்சனங்களை வெளிப்படையாக வைத்திருந்தார், இதனால் கட்சியில் இருந்து விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பல வருடங்களாகவே அதிமுகவின் அசைக்கமுடியாத கோட்டையாக இருந்து வருகிறது. அதனால் தங்க தமிழச்செலவனை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று திமுகவினர் நினைத்து சாதித்துவிட்டனர். இனி தேனி திமுகாவின் கோட்டை என திமுகவினர் கூறிகொளகின்றனர்.

இன்று திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க. தமிழ்ச்செல்வன், ஒற்றைத் தலைமையில் உள்ள ஒரு கட்சி தான் சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு உதாரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவராக செயல்படுகிறார். துணிச்சலான முடிவுகளையும் எடுக்கிறார். அதிமுகவில் இருந்து திமுகவில் ஏற்கனவே இணைந்த எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், சேகர் பாபு, செந்தில் பாலாஜி போன்றவர்களை மு.க.ஸ்டாலின் உரிய மரியாதை கொடுத்து அரவணைத்துள்ளார். அதே போன்ற என் செயல்பாடுகளைப் பார்த்து மு.க.ஸ்டாலின், உரிய பொறுப்புகளை வழங்குவார் என்று நம்புகிறேன் என்ற தங்க.தமிழ்ச்செல்வன், தன்மானம் இடம் கொடுக்காததாலேயே அதிமுகவில் இணைய விரும்பவில்லை என்றும் காரணம் தெரிவித்தார். தேனியில் மிகப் பெரும் மாநாடு போல் கூட்டம் நடத்தி, தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்றும் தங்க. தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

ad

ad