7 ஜூலை, 2019

ஜனாதிபதி மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் கனேடியப் பிரதமர்!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெருங்கிய உறவுகளை பேணும் நோக்கில், ஒரு நாட்டின் தலைவர், மற்றைய நாட்டின் தலைவருக்கு உத்தியோகபூர்வ பயணத்துக்கான அழைப்பை விடுப்பது வழமை. இதற்கான தகவல் பரிமாற்றங்கள் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரகங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது திகதிகள் சம்பந்தமான பிரச்சினை இருந்தால், அழைப்பு விடுத்த தலைவரை தமது நாட்டுக்கு பயணம் செய்யுமாறு அழைப்பு விடுப்பது வழமையான நடைமுறையாகும்.

எனினும், கனேடியப் பிரதமருக்கு விடுக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை கனேடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் தமது நாட்டிற்கு பயணம் செய்யுமாறு மைத்திரிபால சிறிசேனவிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.