புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஜூலை, 2019

யாழிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி தந்தையும் மகளும் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த சம்பவம் வேயங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தந்தையும் , 11 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.வேயாங்கொட பிரதேசத்திலிருந்து மகளை பரீட்சைக்காக பாடசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே
விபத்து இடம்பெற்றதாக வேயாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன