சிறீலங்கா புலனாய்வு படையினரால் படுகொலை செய்யப்பட்ட உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள்
அமெரிக்கவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தனது தந்தையின் படுகொலைக்கு நீதிகேட்டு தொடர்ந்துள்ளார்.
வழக்கில் இருந்து சிங்கள இனப்படுகொளையாளன் கோத்தபயா ராஜபக்சே தப்பிக்க விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவில் மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்கள் முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
இந்த கோரிக்கை மனு கையளிக்கும் ஒழுங்கமைப்பை தமிழின உணர்வாளரும் பத்திரிகையாளர் மற்றும் இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தமிழகத்தின் முக்கிய உடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள் அரசியல் தலைவர்கள் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் இந்த மனுவில் கையெழுத்து வாங்கும் செயல்பாட்டில் இறங்கியுள்ளனர்.
இந்த கோரிக்கை அடங்கிய மனு தமிழகத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது