புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2019

ஈபிடிபியின் ஆதரவு யாருக்கு?

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளா
நாட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்த தே
ர்தல் தொடர்பில் பல்வேறு கருத்தக்கள் பல தரப்பிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந் நிலையில் அத் தேர்தலில் யாரை ஆதரிப்பது அல்லது யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது எமது கட்சிக்கு ஒளிவு மறைவுகள் இல்லை.
ஆனாலும் யாரை ஆதரிப்பதானாலும் தமிழ் மக்கள் தொடர்பில் நாம் கோரிக்கைகளை முன்வைப்போம். அந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கின்றவர்களுக்கு நிச்சயமாக எமது ஆதரவை வழங்குவோம்.
அதே நேரம் இத் தேர்தல் குறித்து இப்போது பேசப்பட்டாலும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பதும் தெரியவில்லை. ஆகையினால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் எமது அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

ad

ad