புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஆக., 2019

முடிவுக்கு வந்தது அவசரகாலச் சட்டம்

ஏப்ரல் 22ஆம் திகதி தொடக்கம் கடந்த நான்கு மாதங்களாக நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, ஜனாதிபதி தொடர்ந்து நீடிப்பு செய்து வந்தார்.

இந்த நிலையில், அவசரகாலச்சட்டத்தை நீடித்து கடந்த ஜூலை 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி நேற்றுடன் காலாவதியானது. அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.