புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2019

நீதியரசர் நீதிமன்றில் தோல்வி கண்டா வரலாறு உண்டே சாதாரண டெனிஸிடம் தோற்றுமாநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-விக்னேஸ்வரன்


 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்
1956 தொடக்கம் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர், பணம், படிப்பு, பண்பு ஆகியவற்றைத் தெரியாதவர்களாக இருந்தனர். இதன் காரணத்தினாலேயே அரசியலானது மாற்றமடைந்தது. எனவே தற்போதுள்ளவர்கள் பணபலம் இல்லாவிட்டாலும் ஓரளவு படிப்பும் பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
தேர்தலுக்காக பாரிய தொகையை செலவு செய்யும் பிரதிநிதிகள், அதை திருப்பிப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போதே ஊழல் சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றமைக்கு காரணம்.
இதன் பின்னர் சாதி, மதத்தை பயன்படுத்தி மேலும் பணம் சம்பாதிக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் எமது உறுப்பினர்கள் சுய சிந்தை அற்று நடக்கத் தலைப்படுகின்றனர். இவையாவும் சேர்ந்தே அரசியல் ஒரு சாக்கடை என்ற பெயரைப் பெற வைத்துள்ளன.
ஆனால் நான் சாக்கடையின் விளிம்பில் நின்று அதில் தள்ளிச் செல்லப்படும் அசுத்தங்களை அவதானித்துக் கொண்டு இருக்கின்றேன். இதுவரையில் அந்த அசுத்தத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ad

ad