புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2019

இது போன்ற கீழ்தரமான போராட்டத்தை பார்த்தில்லை!’ - இந்திய கொடியை மீட்ட பெண்ணுக்கு குவியும் பாராட்டு

காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து லண்டனில் பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவமதிக்கப்பட்ட தேசிய கொடியை கூட்டத்துக்குள் புகுந்து பறிமுதல்செய்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி லண்டனில் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானியர்கள் பலரும் கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் முட்டை, வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன. அதேபோல, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் கொடிகளை கையிலெந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பபட்டது. போராட்டம் தீவிரமடைய, அப்போது அங்கிருந்த சிலர், இந்திய தேசியக்கொடியை கிழித்தும், காலால் மிதித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைக்கண்ட இந்தியாவைச்சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், உடனே அங்கு ஓடிச்சென்று இந்திய கொடியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தார். இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அந்த பெண் பத்திரிகையாளர் பூணம் ஜோசி, ``போராட்டத்தின் போது, நான் காவல்துறை கட்டுபாட்டில் இருக்கும் இடத்தில் நின்றிருந்தேன். அங்கிருந்து, இந்திய தேசியக்கொடியை அவர்கள் அவமதிப்பதை பார்த்ததும், உடனே போராடக்காரர்கள் நின்றிருக்கும் இடத்துக்குச்சென்று கொடியை மீட்டேன். மேலும், போராட்டக்காரர் ஒருவர் வைத்திருந்த தேசியைக்கொடியையும் பிடிங்கிக்கொண்டேன்.

பல்வேறு போராட்டங்களை கண்டிருந்தாலும், இது போன்றதொரு கீழ்தரமான, அசிங்கமான போராட்டத்தைக் கண்டதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய கொடிக்கு ஒரு ஆபத்து என்றபோது, உடனடியாக காவல் கட்டுபாட்டைத் தாண்டிச்சென்று, கொடியை பறிமுதல் செய்த பூணம் ஜோசியை பலரும் பாராட்டி வருகின்றனர். அத்தோடு அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது

ad

ad