புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 செப்., 2019

11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது கிலோமீற்றர்களில் உள்ள பலூசோ நகரத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டுள்ளது.

நீதிக்கான நடைபயணம் நேற்று 10 ஆவது நாளில் Mairie LAIGNES என்னும் நகரத்தை சென்றடைந்த வேளையில் பிரெஞ்சுக் குடும்பத்தினர் நேரடியாக எம்மவர்களோடு வந்து உரையாடினர்.

தாம் இலங்கைத்தீவுக்கு சென்றிருந்ததும் யாழ்ப்பாணம் சென்று வந்ததையும் பாரிசில் உள்ள தமிழர் குடும்பம் ஒன்றுடன் நல்ல உறவை கொண்டதாகவும், இலங்கை தீவில் பிரச்சனை முடிவுற்றது தானே என்றனர். ஆனால் தொடர்ந்து சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்கின்ற வெளித்தெரியாத தமிழ் இனப்படுகொலையை தெரியப்படுத்தியிருந்ததுடன், சிலவற்றைத் தாம் அறிந்திருந்தமையையும் பகிர்ந்து கொண்டனர். நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

எமது நீதிக்கான கோரிக்கையடங்கிய மனுவை நேற்றும் வழியில் இருந்த இரண்டு மாநகரசபையில் கையளிக்கப்பட்டது. வழியெங்கும் மாவீரர் நினைவுச்சின்னங்கள் எம்மை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

குறித்த நீதிக்கான நடைபயணம் நேற்று 10 ஆவது நாளில் மொத்தமாக 260 கிலோமீற்றர்களைத் தாண்டி பலூசோ மாநகரசபையின் முன்னால் நிறைவு பெற்றுள்ளது