புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 செப்., 2019

4286 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவுதற்காக இன்று 4286 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்று வெளியேறும் டிப்ளோமாதாரிகளுக்கு இவ்வாறு இன்று நியமனம் வழங்கப்படுகிறது.

இதன் பிரகாரம் 2340சிங்கள மொழி மூல ஆசிரியர் நியமனங்களும் 1300தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனங்களும் 646ஆங்கில மொழி மூல ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.இவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறும்.

2015மே 08ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் கல்வியியல் கல்லூரிகளுக்கு டிப்ளோமா தாரிகளை நியமிக்குமாறு கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். 2018ஆம் ஆண்டு பாடசாலை கட்டமைப்பினுள் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைய புதிய ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.