புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 செப்., 2019

அதிர்ச்சியில் இந்தியா நிலவில் தரையிறங்க 2.1 கி.மீட்டர் தூரத்தில் தொடர்பு இழந்த சந்திராயன்

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிரங்குவதற்கு 2.1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி அரங்கில் நிலவின் தென் துருவத்திற்கு முதன் முறையாக இந்தியா சார்பில் சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், சுமார் 1 மாத கால பயணத்திற்கு பின்னர், விண்கலத்தில் இருந்து விக்ரம் எனப்படும் லேண்டர் தனியாக பிரிந்தது. இந்த லேண்டர் இன்று அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிரங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடினமான பாதையை எளிதில் கடந்த விகரம் லேண்டர், திடீரென தனது பாதையை தெளிவுப்படுத்த இயலாமல், சிக்னலை இழந்தது. இதனால் எதிர்பார்த்த படி, தரையில் இறங்கியதா ? என்கிற கேள்வி தொடர்கிறது.


இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், “லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். நிலவின் பரப்பில் இருந்து 2.1 கி.மீட்டர் தூரத்தில் லேண்டர் பயணிக்கும் போதே, தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த படி லேண்டர் தரையிறங்கவில்லை என்றாலும், தொடர்ந்து லேண்டரின் பயண பாதைகளை வைத்து, ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தரையிறங்குவதை பார்பதற்காக இஸ்ரோ தலைமையகம் சென்ற மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் மோடி கூறியுள்ளார், இஸ்ரோ விஞ்ஞானி சிவன் உள்ளிட்டோரை தட்டிக் கொடுத்து நம்பிக்கையுடன் இருங்கள் நாம் சாதித்துள்ளது சிறிய விஷயம் அல்ல. வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கதான் செய்யும். நான் உங்களோடு இருக்கிறேன் தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள் எனவும் நம்பிக்கையுடனும் கடன உழைப்புடனும் நமது விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுவோம் எனவும் கூறினார்.நாடு, அறிவியல், மக்களுக்கு பெரும் சேவையாற்றியுள்ளீர்கள் விஞ்ஞானிகளின் உழைப்பைக் கண்டு நாடு பெருமை அடைகிறது என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.