புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 செப்., 2019

இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கை

இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கைஅனுசரணை நாடுகளின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு
பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் தாமதங்களையும் நல்லிணக்கத்தை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் தவறவிட்டு வரும் நகர்வுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் தாமதங்களையும் நல்லிணக்கத்தை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் தவறவிட்டு வரும் நகர்வுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரில், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் தாமதங்கள் குறித்து இணை அனுசரணை நாடுகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கையை நாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.