புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 செப்., 2019

உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு

உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு
இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவு கூருவதற்கான நினைவுச் சின்னங்களை அமைக்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிதியுதவியை வழங்க வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான ஐ.நா குழு கோரியுள்ளது.

காணாமல்போனவர்கள் தொடர்பில் தேசிய உள்ளுர் நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். அதற்கான நிதிஉதவிகளை வழங்க வேண்டும் என ஐ.நா. குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது அவர்களை நினைவு கூருவதற்கான நினைவுசின்னங்களும் வாய்ப்புகளும் குறைந்தளவே உள்ளதாக ஐ.நா. குழு கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள ஐ.நா குழு இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான அனைத்து சம்பவங்கள் குறித்தும் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

இந்த சூழமைவில் சாட்சியங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவது அவசியம் என தெரிவித்துள்ள ஐ.நா. குழு கப்பம் பெறுவதற்காக பலவந்தமாக காணாமல் செய்யப்படுதல் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.