புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 செப்., 2019

வடக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்

வடபகுதி தமிழர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நியுஸ் இன் ஏசியாவிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடபகுதி தமிழர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நியுஸ் இன் ஏசியாவிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2009 இல் ஐந்தாவது ஈழப்போரின் கொடுரமான இறுதி தருணங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு, அவ்வேளை பாதுகாப்பு செயலாளராகயிருந்ததன் காரணமாக கோத்தபாய ராஜபக்சவே காரணம் என தமிழர்கள் கருதுகின்றனர்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை முழு தமிழ் மக்களிற்கும் ஏற்பட்ட அவமானம் என வடக்கு தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தப் போவதாக கோத்தபாய ராஜபக்ச அளித்துள்ள வாக்குறுதி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழ் மக்கள் பொருளாதார அபிவிருத்தியை விட அதிகார பகிர்வு குறித்தும் அரசியல் தீர்வு குறித்தும் நாட்டம் கொண்டவர்கள்.

எனினும் இந்த விடயத்தில் வடக்கு தமிழர்களிற்கும் கிழக்கு தமிழர்களிற்கும் இடையில் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிற்கும் முஸ்லிம்களிற்கும் பிரச்சினைகள் உள்ளன, முஸ்லிம்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.

சில கிழக்கு மாகாண தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சவை வேறு விதத்தில் நோக்குகின்றனர்,கோத்தபாய ராஜபக்ச முஸ்லிம்களிற்கு எதிரானவர் என கருதப்படுவதால் அவர் முஸ்லிம்களின் நடவடிக்கைகளிற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என அவர்கள் கருதுகின்றனர். எனவே, கிழக்கு மாகாண தமிழர்களில் சில பிரிவினராவது கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பார்கள் போல தோன்றுகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி எவரை வேட்பாளராக நிறுத்தினாலும் பெருமளவு தமிழர்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள். தமிழ் கட்சியொன்று போட்டியிடாத தருணங்களில் தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல்களில் கிழக்கு மாகாண மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்