புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2019

கம்போடியாவில் தொடங்கியது தமிழ்க் கவிஞர்கள் மாநாடு

ம்போடியா நாட்டில் உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு ,இன்று கோலாகலமாக தொடங்கியது.
கம்போடியா நாட்டின் சியம்ரீப் மாநில கலாசார மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து உலகத் தமிழ் கவிஞர்களின் 2 நாள் மாநாடு 21, 22ம் திகதிகளில் கம்போடியாவில் ஆரம்பித்து நடைபெறுகிறது.
இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் கவிஞர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கம்போடியா நாட்டின் துணை பிரதமர், சியம்ரீப் மாநில கவர்னர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மேலும் கம்போடியா நாட்டின் கேமர் மொழியில் திருக்குறள் மொழி பெயர்க் கப்பட்டு வெளியிடப்பட உள்ளளமை சிறப்பம்சமாகும்.

ad

ad