புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2019

பொதுஜன பெரமுனவில் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி இன்று, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொது ஜன பெரமுன கட்சியில் இணைத்துள்ளார் என, அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
இன்று 22ம் திகதி மதியம் 1 மணியளவில்
பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றில் மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் மாவட்ட இணைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பொது ஜன பெரமுனவுடன் இணைத்து கொண்டனர்.
ஜெயானந்தமூர்த்தி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். 44,457 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
ஜெயானந்தமூர்த்தியும், அவரது குடும்பத்தினரும் துணை இராணுவக் குழுவினரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் பிரித்தானியாவுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். ஆட்சிமாற்றத்தை அடுத்து நாடு திரும்பிய அவர், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார். தற்போது அவர்பொது ஜன பெரமுனவில் இணைந்துள்ளார்.

ad

ad