புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2019

சட்டத்தரணிகள், பூசகரை தாக்கிய பிக்குகள்


முல்லைத்தீவில், நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சமயத்தில், பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட மூவர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சமயத்தில், அந்த இடத்திற்கு சென்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகளே தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், அவர்களுடன் சென்ற பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தாக்குதலில் காயமடைந்த மூவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆலய பூசகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் பௌத்த பிக்குக்களால் தாக்கப்பட்டோம் என குறிப்பிட்டு, சட்டத்தரணிகளான சுகாஷ், கணேஷ்வரன் உள்ளிட்ட மூவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ad

ad