புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2019

வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் இரகசிய வாக்கெடுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நேற்று இரவு அலரி மாளிகையில் நடத்திய கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நேற்று இரவு அலரி மாளிகையில் நடத்திய கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டுவதற்கும் இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, லக்ஸ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, தயா கமகே ஆகியோர் பங்கேற்றனர்.

ad

ad