புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 செப்., 2019

பாஜக தலைவர் பதவியை ஏற்கச் சொல்லி ரஜினிக்கு அழுத்தம்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதினால் அவர் பாஜக கட்சியல் இருந்து விலகி தனது பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டார்.இந்நிலையில் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு தலைவர்கள் பின்னடித்து வருவதாக தமிழக புலனாய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

எச்.ராஜா , வானதி சீனிவாசன், சிபி. ராதாகிருஷ்ணன், நைனா நாகேந்திரன் போன்றவர்கள் நியமிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில்.

இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் மாணவர் அணியைச் சேர்ந்தவர்கள் இளைய சமுதாயத்தினர் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சுகளும் ஒருபக்கம் நடக்கின்றது.

அனால் பழைய தகுதி வாய்ந்த தலைவர்கள் தலைமை ஏற்க்க தயங்கி வருவதோடு தமிழிசை ஏதோ தாக்குப்பிடிச்சு இருந்துட்டாங்க. எங்களால முடியாது சார்” என்று கூருகின்றனறாம்.

அதேவேளை தமிழக பாஜக தலைவர் பதவியை ஏற்கச் சொல்லி ரஜினிக்கு அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருப்பதாகவும்..

ஆனால் அதை ரஜினி ஏற்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவுக்கு நெருக்கமான ஒரு தமிழக பாஜக உறுப்பினர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.