புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2019

பிரதமர் வி.உருத்திரகுமாரன் - தொல்.திருமாவளவன் அமெரிக்காவில் சந்திப்பு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கும், தமிழகஎவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் அடிமைத்தனம் குறித்து நியூயார்க்-கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ( Columbia University) இடம்பெற்றிருந்த கருத்தரங்கொன்று இடம்பெற்றிருந்தது. சிறிலங்கா, பங்காளாதேஸ், பாகிஸ்தான், நேபாளம், தென்னாபிரிக்கா என பல்வேறு நாடுகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர். இதில் பங்கெடுக்க வருகை தந்திருந்த தொல்.திருமாவளவன் அவர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இக்கருத்தரங்கின்கு தனது தோழமையினைத் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிகோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் !

உலக சிறுவர் நாளையொட்டி, சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்சிறார்களுக்கு நீதி கோரி, ஓக்ரோபர் 6ம் நாள் ஞாயின்று பிரித்தானிய பிரதமர் வாயில்தளமான நம்பர் 10க்கு முன்னால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற இருக்கின்றது.

இலங்கைத்தீவின் இறுதி போரின் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கபட்ட தமிழ்சிறார்களுக்கு என்ன நடந்தது இப்போராட்டம் கோருகின்றது. பிரித்தானாயாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்களும் இணைந்து நடத்துகின்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது.

ad

ad