புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 நவ., 2019

வடக்கு ஆளுநர் பதவிக்கு முரளிதரன்? - பெருமாள், தவராசாவும் போட்டியில்

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் பெயர்களும் ஆளுநர் பதவிக்குப் பரந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நேற்றுக் காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர். எனினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இன்னமும் ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன