திங்கள், நவம்பர் 11, 2019

காட்டுக்குள் காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா- கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில், நேற்று காலை முதல் காணாமல் போயிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவன், காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழ மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் தடி வெட்டுவதற்காக நேற்று காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்தார். மாலை நீண்ட நேரமாகியும் குறித்த மாணவன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கனகராஜன்குளம் பொலிசார், அப்பகுதி இளைஞர்கள், விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து தேடுதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை காட்டுக்குள் கிரவல் வெட்டப்பட்ட குழிக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் நீதிவானின் வருகையின் பின்னர் மருத்துவ சோதனைக்காக வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது . கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ,மேற்கொண்டு வருகின்றனர்