புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 நவ., 2019

அமெரிக்காவில் 'தங்க தமிழ் மகன்' ஆனார் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்தை விமான நிலையத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிகாகோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சுதாகர் தலேலா தலைமையில் உயர் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், அமெரிக்க நாட்டின் சிகாகோ மாநகரில் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத்தொடர்ந்து சிகாகோ உலகத் தமிழ் சங்கம் சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 'தங்க தமிழ் மகன்' விருது வழங்கப்பட்டது. இதுகுறித்த ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்க நாட்டின் சிகாகோ மாநகரில், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், "தங்கத் தமிழ் மகன் விருது" பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சிகாகோ உலக தமிழ்ச் சங்கத்திற்கு எனது அன்புகலந்த நன்றி!’ என்று குறிப்பிட்டுள்ளார்