புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 நவ., 2019

கொடூர கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார் சிறிசேன

கொழும்பு - ரோயல் பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி ஜூட் அன்ரனி ஜயமஹாவுக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தை சிறைச்சாலை திணைக்களம் இன்று (09) பெற்றுள்ளது.

சுவிடனை சேர்ந்த 19 வயது மாணவி யுவேன்னியை படுகொலை செய்த மரண தண்டனை கைதி யூட் அன்ரனி ஜயமஹாவுக்கு ஜனாதிபதி சிறிசேன பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே பொது மன்னிப்பு ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.சிறிசேனவின் இந்த பொது மன்னிப்பு தொடர்பில் குறித்த மாணவியின் சகோதரி கரோலினி ஜோன்சன் கடும் எதிர்ப்பினை அண்மையில் வெளியிட்டார்.

அதில் சிறையில் இருந்து பிஎச்டி முடிப்பதன் மூலம் கொடூர கொலைகாரனான அவர் சீர்திருத்தப்பட்டதாகக் கூற முடியாது. தனது சகோதரி மண்டையோடு பல துண்டுகளாக சிதறும் வகையில் கொலை செய்யப்பட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தண்டனை பெறாமல் சிறையில் இருக்கும் அரசியல் கைதி ஆனந்த சுதாகரை அவரது பிள்ளைகளுக்காக பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரியும் சிறிசேன கருனை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது