புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2019

தப்பித்தார் நிஷாந்த டி சில்வா: ஏனையோருக்கு தடை!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு, குறித்த திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஊழியர்களின் பெயர் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெயர் பட்டியில் இன்று (25) அதிகாலை விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், பெயர்களை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, தமது திணைக்களத்துக்கு அறிவிக்காமல் குடும்பத்துடன், நேற்று (24) பிற்பகல் 12.50 மனிக்கு சுவிட்ஸர்லாந்து சென்றபின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ad

ad