புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 நவ., 2019

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான தமிழர் இராஜினாமா

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி முதல் அமுலாகுமு் வகையில் இவர் தனது பதவி விலகலை அறிவித்திருந்தார் என குறிப்பிடப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் பதினான்காவது ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி கடந்த 2016 ஜூலை மாதம் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்று, பல்கலைக்கழக கல்வியை முடித்த அவர், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.எச்.டி பெற்றார்.

அவர் 1974 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியில் ஒரு பணியாளர் அதிகாரியாக சேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது