புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 டிச., 2019

மஹிந்தவை ஆதரித்ததற்காக மன்னிப்புக் கோரும் சம்பிக்க

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் தெரிவு மற்றும் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய செயற்பட்ட விதம் தொடர்பில் தற்போது கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று சமய வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவை 2004ஆம் ஆண்டு பிரதமராக்க தான் உள்ளிட்ட கட்சி ஆதரவளித்தமைக்கு இன்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், அவ்வாறு ஆதரவு தெரிவித்தமையை நினைத்து தற்போது, வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்